யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, உணவக உரிமையாளர்கள் மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு, யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் கடந்த (10) திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் இன்றி உணவை கையாண்டமை போன்ற அடிப்படையான சுகாதார வசதிகள் கூட இல்லாமல் உணவு தயாரித்தமையினால் மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் செ. லெனின்குமார் மூன்று வியாபார உரிமையாளர்களுக்கும் மொத்தமாக 35,000 ரூபா தண்டப் பணம் அறவிட்டதுடன் கடும் எச்சரிக்கையும் வழங்கினார்.