Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏமனில் விபத்துக்குள்ளான படகு; 49 பேர் பலி!

ஏமனில் விபத்துக்குள்ளான படகு; 49 பேர் பலி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த அகதிகளுடன் பயணித்த படகொன்று ஏமன் அருகே கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியதில் இதுவரை சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த படகில் பயணித்த மேலும் 140 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சோமாலியாவின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 260 சோமாலியர்கள் மற்றும் எத்தியோப்பியர்களை ஏற்றிக்கொண்டு ஏமன் வளைகுடா வழியாக படகு ஒன்று பயணித்தது.

320 கிலோமீட்டர் பயணித்த நிலையில் அந்த படகு, ஏமனின் தெற்கு கடற்கரையில் கடந்த (10) மூழ்கியது.

இதில், சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த படகில் பயணித்த 140 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

படகில் பயணித்தவர்களில் இதுவரை 71 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 3க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான மற்றுமொரு நினைவூட்டலாக இந்தச் விபத்து அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமதலி அபுனஜெலா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “அவசரமாக புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏமனில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் இருந்த போதிலும், 2021 முதல் 2023 வரை ஆண்டுதோறும் அந்த நாட்டுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 27,000த்திலிருந்து 90,000 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 3,80,000 புலம்பெயர்ந்தோர் தற்போது ஏமனில் உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!

September 23, 2026
Next Post
விபத்தில் உயிரிழந்த கணவன்; செய்தியை கேட்ட அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு!

விபத்தில் உயிரிழந்த கணவன்; செய்தியை கேட்ட அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு