தற்போதைய கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கனேடியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சில ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காணப்படுவதால் மிகவும் விழிப்பாக இருக்குமாறு கனேடிய மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
“ஐரோப்பாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. பல ஐரோப்பிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்” என்று கனேடிய அரசாங்கம் தனது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.
“பிரான்சில் கடந்த சில ஆண்டுகளாக, பல சந்தர்ப்பவாத மற்றும் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. இவை பல மரணங்கள் மற்றும் காயங்களை விளைவித்துள்ளன. மேலும் தாக்குதல்கள் சாத்தியமாகும்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த பயண எச்சரிக்கைகள் கொண்ட பிரபலஇடங்களான பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, ஸ்பெயின், சுவீடன், பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து.
இந்தக் கோடை காலத்தில் பிரான்சின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே குறித்த பகுதியில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிக அளவில் காணப்படுவதாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே “பொது இடங்களில் இருக்கும்போது உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எப்போதும் விழிப்புடன் இருங்கள்” என்று கனடிய பயண ஆலோசனை தெரிவித்துள்ளது. “பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது குறிப்பாக எச்சரிக்கையாக இருங்கள்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.