அரசியல் ஆர்வலர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இந்தக் கொலையை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபாணி இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் நேற்றையதினம் (22) துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
மீதொட்டுமுல்ல பிரதேசத்தின் லக்சந்த செவன எனப்படும் அடுக்குமாடிக் கட்டடத் தொகுதியில் பிரியசாத்துக்கு சொந்தமான வீட்டில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, டேன் பிரியசாத் மீது நான்கு துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.