ஜூன் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையின்படி, வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் விதிகளை மீறி 2023 ஜனவரி முதல் மொத்த மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட 60.39% அதிகமாக அரசாங்க அச்சகத் திணைக்களம் செலவிட்டுள்ளது.
திணைக்கள ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய 2 மாதங்களில் நூற்று ஐம்பத்தொன்பது கோடியே பத்து லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று ஐந்து ரூபாய் (1,591,076,895) மேலதிக நேர மற்றும் பிற கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அரசாங்க அச்சகத் திணைக்கள ஊழியர்களுக்கு மேலதிக நேர மற்றும் ஏனைய கொடுப்பனவுகளாக 133,616,897 தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 31 வரைக்கும், மேலதிக நேர மற்றும் பிற கொடுப்பனவுகளாக தொண்ணூற்று ஒன்பது கோடியே இருபது லட்சம் ரூபாய் (992,000,000) வழங்க வரவு செலவுத்திட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
அச்சிடும் திணைக்கள ஊழியர் உத்தியோகத்தர்களுக்கு வர்த்தக அச்சடிப்பு கொடுப்பனவை வழங்குவதில் 03 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென அமைச்சரவை அறிவித்தல் தீர்மானத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வின் படி, 1998 முதல், அந்த 03 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
ஆனால் 2023ஆம் ஆண்டு இந்த நிபந்தனைகளை நிறைவேற்றாமல் ஒரு கோடியே எழுபத்து நானூற்று இருபத்து ஒன்பதாயிரத்து இருநூற்று நாற்பத்து நான்கு ரூபாய் வணிகப் பிரிண்டிங் கொடுப்பனவாக செலுத்தப்பட்டிருப்பது தணிக்கையில் தெரியவந்துள்ளது.
தணிக்கை அறிக்கையின்படி, ஜனவரி 27, 2023 அன்று நிதியமைச்சகம் வெளியிட்ட வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை ஆவணத்தில் மேலதிக நேர மற்றும் விடுமுறை ஊதியங்கள் மற்றும் பிற கொடுப்பனவுகளுக்கான ஒதுக்கீடு குறைந்தது 6% குறைக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.