Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு; பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு; பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் இன்று(14) வெள்ளிக்கிழமை முற்பகல் வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீட்டில் வசித்த இளம் பெண் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

முற்பகல் வேளை குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கியுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு துப்பாக்கி தாரி தப்பிச் சென்றுள்ளார்.

சித்தீக் சிபானியா (வயது32) என்பவரே இச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதுடன் இப் பெண்ணின் கணவர் அவுஸ்த்ரேலியாவில் இருப்பதாகவும், இவர் ஒரு மௌலவி எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.வி கமராக்களையும் சோதனை செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துப்பாக்கி இரவைகளையும் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

தொடர்புடையசெய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!
செய்திகள்

ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!

September 16, 2026
Next Post
குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு!

குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு