குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
குவைத்தின் மங்காப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று முன்தினம் (12) அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்ததுடன் 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 07 பேரும் கேரளாவைச் சேர்ந்த 26 பேரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை குவைத் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியார்களின் உடல்களை கொண்டு வர இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி 130 என்ற விமானம் நேற்று (13) குவைத்துக்குச் சென்றிருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதேவேளை கொச்சியிலிருந்து உடல்கள் அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.