குழந்தைகளிடையே சரும நோய்கள் ஏற்படும் அபயாம் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்னர்.
நாட்டில் தற்போது நிலவும் அதிகளவான வெப்பமான காலநிலை காரணமாக இவ்வாறு குழந்தைகளிடையே சரும நோய்த் தொற்று பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவிக்கையில், குழந்தைகள் நீரில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முற்பகல் வேளையில் சுமார் 20 நிமிடமும், மாலை வேளையில் சுமார் 20 நிமிடமும் குழந்தைகளுக்கு நீரில் விளையாட சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
இந்த நடைமுறையைப் பின்பற்றினால், குழந்தைகளை சரும நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.