அதிகரித்துள்ள விலைகளுடன் ஒப்பிடுகையில் கையடக்கத் தொலைபேசிகளின் விலை குறைப்பு போதாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகளின் விலை 300 முதல் 400 சதவீதம் வரை அதிகரித்தது, ஆனால் 30 முதல் 35 சதவீதம் வரையே குறைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் கையடக்கத் தொலைபேசிகளை அத்தியாவசிய பொருட்களாக அறிவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.