யுக்திய நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளால் நாட்டில் குற்றச்செயல்கள் 24 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்தம் 2055 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், மே மாதம் முதலாம் திகதி முதல் அதிகளவான காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டதன் பின்னர் கடந்த ஐந்து மாதங்களில் மொத்த வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை 1562 ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் 60 வீதமான காவல்துறையினரை ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்துமாறு காவல்துறைமா அதிபர் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரையை தொடர்ந்து, ரோந்து நடவடிக்கைகளின் எண்ணிக்கை 55,853 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதே காலகட்டத்தில் 740 வீடுகள் உடைப்பு, 451 சொத்துத் திருட்டு, 136 வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு, 126 கொள்ளை, 109 தங்க நகை கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும், தங்க நகைக் கொள்ளைகள் 24 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.