உத்தேச வாடகை வருமான வரி இந்த நாட்டின் 90% மக்களுக்கு சுமையாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்று(19) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் 10% பணக்காரர்களுக்கு மட்டுமே அந்த வரி விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே இந்த வரி தொடர்பில் சாதாரண மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வரிக்கு உட்பட்ட 10% மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிகள் ஏனைய 90% மக்களின் தேவைக்கே செலவிடப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாடகை வருமான வரியானது, சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபரிடமும் அறவிடப்படாது என நேற்று முன்தினம்(18) ரணில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.