மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. நேற்று தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால், இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றதாகவும் முடியாமல்போனதால், பிரதி சபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னமபலம் எம்.பி தெரிவித்துள்ளார்.