நடிகர் சிம்பு தனக்கு ஹிட் படம் கொடுத்த இயக்குனர் ஒருவர் மேல் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வழக்கமாக சிம்பு பேசும் பேச்சுக்கும், அவருடைய நடவடிக்கைகளுக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தான் அவரை ஒதுக்குவார்கள். ஆனால் முதல்முறையாக சிம்பு ஒரு இயக்குனரை ஒதுக்கி இருக்கிறார். அவருடன் இனி படமே பண்ண மாட்டேன் என்று சொல்லும் அளவிற்கு இந்த பிரச்சனை சென்றிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு வரை சிம்புவின் சினிமா வாழ்க்கை என்பது முடிந்து போய்விட்டது என்று தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நினைத்திருந்தனர். பின்னர் தன்னுடைய கடின உழைப்பால் மீண்டும் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார் சிம்பு. அவருடைய கடின உழைப்பு மற்றும் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சிம்புவுக்கு அவருடைய ரி என்ட்ரியில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த திரைப்படம் மாநாடு. மாநாடு படத்தின் வெற்றிதான் மற்ற இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அவரின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அதை தொடர்ந்து சிம்புவை நம்பி அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. அதில் சிம்பு தேர்ந்தெடுத்த கதை தான் வெந்து தணிந்தது காடு.
அதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் கௌதம் மேனன் தான். கௌதம் ஏற்கனவே சிம்புவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்ததினால் சிம்பு மீண்டும் அவருடன் இணைந்து படம் பண்ணினார். அவருடைய கணிப்பு தோற்றுப் போகவும் இல்லை, வெந்து தணிந்தது காடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனால் தயாரிப்பாளர் ஐசரி கணேசும் அடுத்தடுத்து சிம்புவுடன் படம் பண்ண ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்.
ஆனால் சிம்பு தற்போது வேறு தயாரிப்பாளர்களுடன் இணைந்து படம் பண்ணுவதால் பயங்கர டென்ஷன் ஆன ஐசரி கணேஷ் சிம்புவிடம் இது பற்றி கேட்கும் பொழுது சிம்பு உங்கள் பேனரில் எத்தனை படம் வேண்டுமானாலும் பண்ணுகிறேன் ஆனால் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் வேண்டாம் என்று ஒரு நிபந்தனையை சொல்லி இருக்கிறார். சிம்புக்கு இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குநரை அவர் வெறுப்பது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
வெந்து தணிந்தது காடு சூட்டிங் நடந்த போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சிம்புவை ரொம்பவும் கஷ்டப்படுத்தியதாகவும், அவமரியாதையாக பேசியதாகவும், இதனால் தான் சிம்பு இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் அவர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. அதனால் தான் வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியான பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட கௌதம் மேனனை கூப்பிடவில்லையாம் .