Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானியா மறுப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானியா மறுப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் (TGTE), முன்வைக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டினை அந்த ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை (21.06.2024) ஏகமனதாக நிராகரித்துள்ளது.

இந்த மேன்முறையீடு தொடர்பில் மனுதாரர்கள் தரப்பினர்களிடம் விரிவான சாட்சிய விசாரணைகளை, கடந்த மார்ச் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் குறித்த ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது.

இந்தநிலையில் அந்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதுடன், இந்த முடிவு பிரித்தானிய நீதிமன்றத்திற்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவருடைய பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ”இங்கிலாந்து தடை செய்யப்பட்ட அமைப்பு மேல்முறையீட்டு ஆணையம் மற்றும் நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றம் தலைமையில் தடை நீக்கத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது.

இலங்கையின் வடக்கு கிழக்கில் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தில் தடை செய்யப்படவில்லை, அந்த அமைப்பு சாத்வீக வழிமுறைகள் ஊடாக தனது நோக்கங்களை அடைய முயல்கின்றது.

உலக நாடுகள் தங்கள் மீதான தடையை நீக்கச் செய்வதன் மூலம் தாங்கள் மீண்டும் உயிர்பெறும் நிலையை உருவாக்குவதே விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் மூலோபாய அணுகுமுறை“ என அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

UK PROSCRIPTION ON LTTE TO BE MAINTAINED

(June 21, 2024.)
UK proscribed organisation appeals commission, a independent court set up by parliament (headed by a high court judge and two retired senior diplomats), ruled against deproscribing the LTTE.

The UK will continue to…

— M U M Ali Sabry (@alisabrypc) June 23, 2024

தொடர்புடையசெய்திகள்

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!
செய்திகள்

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!

September 15, 2026
10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!
செய்திகள்

10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!

September 15, 2026
மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்
செய்திகள்

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

September 15, 2026
செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!

September 15, 2026
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!
செய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!

September 15, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மதகுரு ஒருவருடன் பெண்ணொருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மதகுரு ஒருவருடன் பெண்ணொருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.