பொதுச் செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் இலங்கை மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பன அரசாங்கத்திற்கு வழங்கி வந்த பண கொடுக்கலை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திறைசேரியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரச வருமானத்தை அதிகரிப்பதன் மூலமும், அரச செலவினங்களை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலமும் இந்த நிலைமை எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
மேலும் பல சவால்களுக்கு மத்தியில் திறைசேரி 2023 ஆம் ஆண்டு இந்த நிலையை அடைந்துள்ளதாகவும், இது இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு கிடைத்த விசேட சாதனை எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று பொருளாதாரம் ஓரளவு முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், நீண்டகாலமாக நாட்டில் நிலவிய மோசமான நிதி நெருக்கடி தற்போது ஓரளவுக்கு மறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.