நிலாவில் ஆய்வுகளை நடத்திய சீனாவின் ‘சாங்கே – 6’ விண்கலம் நேற்று (25) பூமிக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலம், நிலாவில் சேகரித்த சுமார் 2 கிலோ கிராம் அளவான மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் வடக்கில் உள்ள மொங்கோலியாவில் இன்று இந்த விண்கலம் தரையிறங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் நிலாவிலிருந்து திரட்டப்பட்ட அதிகப்படியான மாதிரிகளை இந்த விண்கலம் பூமிக்குக் கொண்டுவருதால், இது குறித்து சந்திரமண்டல ஆய்வு விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த மாதிரிகளைச் சோதனைக்கு உட்படுத்தும் போது, பல ஆண்டுக்காலமாக நிலவி வருகின்ற நிலாவிலுள்ள சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.