காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தை மற்றும் நாவற்குடாவிலுள்ள படுகட்டார் வீதியிலுள்ள இரு வீடுகளில் நுழைந்து, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 22 வயது இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எஸ்.ஏ.றஹிம் தெரிவித்தார்.
காத்தான்குடியைச் சேர்ந்த இவ்இளைஞன் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள கிராமமொன்றில் திருமண முடித்துள்ளார்.
அங்கிருந்து சொந்த ஊருக்கு வருகை தந்து இவ்வாறு கொள்ளையிலீடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.