“மாகாண சபைகள் தேர்தல் மக்களின் இறைமையைப் பிரயோகிக்கும் தீர்ப்பே. அதனை காலம் தாமதிக்காமல் நடத்த வேண்டும் என்று சட்டமா அதிபரும் மனுதாரர் எம். ஏ. சுமந்திரனும் விடுத்த கோரிக்கையை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்” என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு மூலமாக, மாகாண சபைகள் தேர்தல் ஊடாக மக்கள் இறைமையை பிரயோகிக்க முடியும் என்ற தனது முன்னைய தீர்ப்பை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.மாகாண சபைகள் தேர்தலை நடத்தும் நோக்கில் மாகாண சபை தேர்தல்கள் (திருத்தம்) எனும் தனிநபர் சட்ட மூலத்தை சுமந்திரன் எம். பி. கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்திருந்தார். அந்த அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அந்த சட்டமூலம் செல்லு படியற்றதானது.
இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அந்த சட்டமூலம் புதியதாக மீளக் கொண்டுவரப்பட்டது. சுமந்திரன் எம். பி கொண்டு வந்த இந்த சட்ட மூலத்தை மனோ கணேசன் எம். பி. வழிமொழிந்திருந்தார். அந்த சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியாக அறிவித்தது. இந்த சட்டமூலம் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி இரு சிங்கள அமைப்புகள் உயர்நீதிமன்றத்தை நாடின.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் சட்டமூலத்தில் “சரத்து ஒன்றும், சொல் ஒன்றும்” தேவையற்றவை என்பதால் அவற்றை நீக்குமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனை மனுதாரரான சுமந்திரன் எம். பியும் ஏற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து, உயர்
நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருந்தது.அதில்,“மாகாண சபைகள் தேர்தல் மக்களின் இறைமையை பிரயோகிக்கும் தேர்தலாகும். அது கால தாமதமின்றி நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறியிருந்ததது. இந்தத் தீர்ப்பை பாராளுமன்றத்துக்கு சபாநாயகர் நேற்று அறிவித்தார்.
இதன்படி, சில வருடங்களுக்கு முன்னர் நடந்த வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் மாகாண சபைகள் தேர்தல் மக்கள் இறைமையை பிரயோகிக்கப் பயன்படுத்துவதற்கான தீர்ப்பு என்று வழங்கிய
தனது தீர்ப்பை அது மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.
அரசமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல், மக்கள் தீர்ப்பு ஆகிய மூன்று சந்தர்ப்பங்களிலுமே மக்களின் இறைமை பிரயோகிக்கப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் இது மிக முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகின்றது.முன்னதாக, மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் 2017ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டது. இதன்போது, மாகாண சபைகள் தேர்தல் முறைமை நீக்கப்பட்டு புதிய தொகுதி – விகிதாசார சேர்ந்த கலப்புதேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட் டது. இதேநேரம், அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தடவையில் தேர்தலை நடத்தவும் திட்டமிடப்பட்டது.
இதனை, ஒரு வருட காலத்துக்குள் நிறைவேற்றுவது என்றும் முடிவானது.ஆனால், இதேமுறைமையில் நடத்
தப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகள் பல கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தேர்தல் முறைமையை மாற்றியமைக்ககட்சிகள் விரும்பின. இதையடுத்து
மாகாண சபைகள் தேர்தலை நடத்த முடியாமல் போனது. இதையடுத்தே சுமந்திரன் எம். பி. மாகாண சபைகள் தேர்தல் திருத்தத்தை தனிநபர் சட்டமூலமாக கொண்டுவந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.