களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பெரும் அசௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள
பரீட்சை நிலைகளுக்கு செல் லும் வீதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடமைகளில் ஈடுபட்டுள்ள பணிக் குழாமினருக்கும் தேவையான
போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், முதற்கட்டமாக போக்குவரத்து சிக்கல்களை சீர்செய்வதற்காக கடற்படையுடன் இணைந்து படகு சேவை மற்றும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த நிலையங்களுக்கான வினாத்தாள்கள், மாற்று வீதிகள் ஊடாக கொண்டு செல்ல அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அனர்த்த நிலைமைகளால் பரீட்சைக்கு தோற்ற இடை யூறுகள் ஏற்பட்டால் அது குறித்து அறிவிக்க அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என அவசர தொலைபேசி இலக்கத்துக்கு
அழைக்குமாறு மாணவர்களிடம் கோரப்பட்டுள்ளது.