கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலின் கீழ் இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக புதிய கேட்போர் கூடத்தில் மக்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த நிகழ்வு ஆளுநரின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து
வைக்கப்படும்.மாவட்டத்தினைச் சேர்ந்த மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்னைகளை இதன்போது முன்வைக்கமுடியும்.
இந்நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்க ளின் பிரதானிகளும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.