கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) மாலை 6.40 மணியளவில் ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலின் மீது தெமட்டகொடை பகுதியில் வைத்து கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ரயிலில் அதிக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்ததோடு, கல் வீச்சுத் தாக்குதலினால் ரயிலின் யன்னல் மற்றும் கதவு சேதமடைந்துள்ளன.
கல் வீச்சுத் தாக்குதலையும் மீறியும் ரயில் தொடர்ந்து தனது பயணித்தை மேற்கொண்டுள்ளது.