சீனாவில் உருவாக்கப்பட்டுவரும் சக்திவாய்ந்த ரொக்கெட், தரையில் பொருத்தி சோதிக்கப்பட்டபோது எதிா்பாராத விதமாக விண்ணில் பாய்ந்து விழுந்து நொறுங்கியது.
இது குறித்து அந்த ரொக்கெட்டை சோதித்துவரும் தனியாா் நிறுவனமான ஸ்பேஸ் பயனீா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
தியான்லாங்-3 ரொக்கெட்டை நிலையாகப் பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், கட்டமைப்பு கோளாறு காரணமாக அந்த ரொக்கெட்எதிா்பாராத விதமாக விண்ணில் பாய்ந்தது. எனினும், அது மக்கள் வசிக்காத மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதால் யாரும் காயமடையவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.
விபத்தைச் சந்தித்த தியான்லாங்-3 ரொக்கெட்தான் சீனாவின் அதிக சக்திவாய்ந்த ராக்கெட் என்று கூறப்படுகிறது.