சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டை மீட்டு எடுப்பதற்கு தற்பொழுது செல்லும் பாதையை விடவும் மாற்றுக் கொள்கைகள் இருந்தால் அவ்வாறான விடயங்களை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு விமான பயணச்சீட்டு மற்றும் தங்குமிட வசதிகள் அரசாங்கத்தின் செலவில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் முன்வைக்கும் மாற்று யோசனைத் திட்டங்கள் சிறந்தவை என்றால் அவற்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொடர்ந்தும் பழைய அரசியலில் ஈடுபட முடியாது எனவும் மற்றும் இப்பொழுது எடுக்கும் தீர்மானங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.