மலையக பெருந்தோட்டங்களில் உள்ள 3,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவுப் பொருட்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கொட்டக்கலையில் இடம்பெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சுமார் 1,500 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள 26,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள காலை உணவு வழங்கும் புதிய வேலைத்திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு ஊடாக இவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.