மட்டக்களப்பு திருப்பெரும்துறை பிரதேசத்தில் தனியார் தென்னம் தோப்பு காணியில் மாநகர சபையினால் கொண்டு சென்று கொட்டப்பட்ட குப்பை மேட்டில் பாரிய தீப்பரவல் ன் நேற்று (07) ஏற்டபட்டிருந்தத.
இந்த தீ விபத்தானது அந்த பகுதியிலுள் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளதையடுத்து தீயணைக்கும் படையினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் துரிதமாக செயற்பட்டதையடுத்து தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
குறித்த பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான தென்னம் தோப்பு காணியில் குப்பைகளை கொட்டி நிரப்புவதற்காக மாநரசபைக்கு காணி உரிமையாளர்கள் இருவர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து 3 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணியில் தினமும் பாரியளவிலான குப்பைகளை உழவு இந்திரம் மற்றும் கனரக வாகனங்களில் கொண்டு சென்று கொட்டிவருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று மாலை 4 மணிக்கு குப்பைமேட்டில் தீ பற்றி எரிய ஆரம்பித்ததையடுத்து அந்தபகுதியிலுள்ள தென்னை மரங்கள் மற்றம் மரங்களில் தீப்பற்றியதுடன் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவி எரியதொடங்கியதையடுத்து தீயணைக்கும் படையினர் தீயை குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து, தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.