LPL தொடரில் கண்டி ஃபால்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க போட்டிக் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
LPL போட்டியின் ஆடை தொடர்பான சட்டத்தை மீறியமைக்காகவே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வனிந்து ஹசரங்க இந்த வருட போட்டியில் பெற்ற போட்டி கட்டணத்தில் இருந்து இத் தொகையை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு அணியின் நிறங்கள் அடங்கிய தனித்தனி ஆடைகள் வழங்கப்பட்டுள்ளது. எனினும், வனிந்து ஹசரங்க வித்தியாசமான லோகோ கொண்ட ‘ஹெல்மெட்’ அணிந்து மைதானத்திற்கு வந்தமையால், அதனை கழற்றுமாறு நடுவர் ரோலி பிளாக் கோரிக்கை விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும், நடுவரின் கோரிக்கையை ஏற்காதமையினால் வனிந்துவுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.