அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் ‘அஸ்வெசும’ வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை அதிபரின் ஊடகப் பிரிவு நேற்று (09) வெளியிட்டுள்ளது.
இதன்படி, அஸ்வெசும’ வேலைத் திட்டத்தில் முதல் கட்டத்தில் தகுதிபெற்ற 18 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு மேலதிகமாக இரண்டாம் கட்டத்தில் மேலும் 450,924 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், நலன்புரிச் சேவைகளைப் பெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து, தகவல் சரிபார்க்கும் பணிகள் ஜூலை 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, அஸ்வசுமவின் முதல் கட்டத்திற்கு 1,854,000 பேர் தகுதி பெற்றுள்ளனர், இதற்காக 58.5 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாதவர்கள் அல்லது தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க, நலன்புரிச் சபை அவகாசம் அளித்துள்ளது.