மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘எமது காலம்’ எனும் தொனிப்பொருளில், அகில இலங்கை ரீதியில் பயணிக்கும் அருங்காட்சியகத்தை காட்சிப்படுத்தும் 4வது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு புராதன நாகரிகம் மற்றும் தொழில் நுட்பங்களை இலகுவான முறையில் அறிந்து கொள்வதற்கும், ஆதி வரலாற்றை புரிந்து கொள்வதற்கான ஒரு களமாக இக்கண்காட்சியகம் அமைந்ததுள்ளது.
இன்றுமுதல் 7 நாட்கள் இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் 243 வது இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, ஸ்கோப் நிகழ்ச்சி திட்ட ஆலோசகர் சுஜன் நாணயக்கார, சேர்ச் போ கொமன்ட் கிரவுண்ட் நிறுவன தேசிய பணிப்பாளர் நவாஸ் மொஹமட்,கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி, கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களம் மாகாண பணிப்பாளர் என்.தனஞ்சயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.