மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பெருமளவான ஆயுதங்கங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மீட்பு பணியானது மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் நேற்று (10) விசேட அதிரடிப்படையினரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-467.png)
இதன் போது 20ஆயிரம், ரி56ரக துப்பாக்கி ரவைகளும் 300 கண்ணி வெடிகளும், 38 வெடி மருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடைப்படையின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜயசுந்தர அவர்களின் கீழான அம்பாறை கட்டளைத்தளபதி உதவி கட்டளை அதிகாரி பீ.குணசிரி அவர்களின் தலைமையின் கீழானதுமான மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி டடிபிள்யு ஏ.ஏ.பி.சம்பத் குமார அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் குறித்த அகழ்வுப்பணி இடம்பெற்றுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-468-1024x766.png)
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி. லக்மல் குமார, கல்லடி , களுவாஞ்சிகுடி, வவுணதீவு அகிய பிரிவுகளின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த அகழ்வுப்பணியினை மேற்கொண்டனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-470-1024x568.png)
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய இந்த அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன், வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிஸார் பொறுப்பேற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-469-1024x572.png)