“விக்னேஸ்வரன் ஐயா அரசியலில் தொடர்வது தமிழ் மக்களுக்கு ஒரு சாபக்கேடு என்று தான், நான் அவருடன் பயணிப்பதை நிறுத்தி கொண்டேன்” என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சராக பதவியேற்ற போது பலரது எதிர்ப்புகளுக்கு மத்தியில் நான் அவரை வரவேற்றேன். அப்போது அவரிடம் ஒரு ஜனோவசியம் இருந்தது.
ஆனால் இன்று அவர் அத்தனை பிற்போக்குதனங்களும் கொண்ட ஒருவராக இருக்கிறார். ஆரம்பத்தில் நான் அதை உணரவில்லை என்றாலும் பின்னர் உணர்ந்துகொண்டேன்.
அதிலொன்று தான் விக்னேஸ்வரனின் மின்னஞ்சல் விவகாரம். 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரப்போகின்றது என்ற சந்தர்பத்தில் 2019 ஆம் ஆண்டளவில் இந்த சம்பவம் நடந்தது.
அதிலிருந்து தெரிந்துகொண்டேன்,விக்னேஸ்வரன் பிற்போக்குதனமான எண்ணம் கொண்டவர். அவர் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருக்கும் போது அவர் இன நலன்களை பேணும் வகையில் செயற்பட வேண்டுமே தவிர சுயநலன் கருதி பேசக்கூடாது.எனவே விக்னேஸ்வரன் ஐயா அரசியலில் தொடர்வது தமிழ் மக்களுக்கு ஒரு சாபகேடு என்று,நான் அவருடன் பயணிப்பதை நிறுத்தி கொண்டேன்.”என தெரிவித்துள்ளார்.