மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனைப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை – செம்மண்ஓடை பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் மட்டக்களப்பு நோக்கி தன்னாமுனை பகுதியால் செல்லும் போது பின்னால் வந்த கார் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இவ் விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.