பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்து மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காகத் தொலைபேசி இணையச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பில் 30 வீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளப் பெறுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 6 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.