ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் நேற்று (22) உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு மாத்திரம் வரவு செலவுத் திட்டப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
அதன்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை நடத்துவதற்கு வழங்கிய ஆதரவிற்கு ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க தயார் என எதிர்க்கட்சிகள் கூறினாலும், ஜனாதிபதி தேர்தலை கண்டிப்பாக நடத்துவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தமது அரசாங்கம் உழைத்து நாட்டுக்கு காட்டியுள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட ஏனைய குழுக்கள் இன்னமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.