மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 ஓ.எஸ்ஸில் வாய்ஸ் டைப்பிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விண்டோஸ் 11 ஓ.எஸ்ஸை கடந்தாண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. விண்டோஸ் 10 பயனர்கள் விண்டோஸ் 11 ஓ.எஸ்ஸை இலவமாக அப்கிரேடு செய்ய முடியும். நிறுவனமும் புதிய விண்டோஸிற்கு அப்கிரேடு செய்யும் படி பயனர்களை அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் விண்டோஸ் 11 ஓ.எஸ்ஸில் வாய்ஸ் டைப்பிங் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, விண்டோஸ் 11 வாய்ஸ் டைப்பிங் அம்சம் Azure சேவையால் இயக்கப்படுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்தி வாய்ஸ் மெசேஜை டெக்ஸ்டாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு இண்டர்நெட், மைக்ரோபோன் ஆகியவை பயன்படுத்த வேண்டும்.
எவ்வாறு பயன்படுத்துவது?
மைக்ரோசாப்ட் வாய்ஸ் டைப்பிங் வசதியை பயன்படுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் Windows + H பட்டனை கிளிக் செய்யவும். வாய்ஸ் டைப்பிள் லாஞ்சர் ஆப்ஷனை எனெபிள் செய்து இந்த வசதியை பயன்படுத்தலாம்.
இருப்பினும் இந்த வசதியை மேனுவலாக மட்டுமே எனெபிள் செய்ய முடியும். உங்கள் லேப்டாப்பில் பல்வேறு மைக்ரோஃபோன்கள் இருந்தால் உங்கள் விருப்பபடி தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.