காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு AI மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது.
காஸாவில் நடந்த போரின் போது இஸ்ரேலிய இராணுவத்திற்கு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை விற்றதாகவும், இஸ்ரேலிய பணயக்கைதிகளைக் கண்டுபிடித்து மீட்பதற்கான முயற்சிகளுக்கும் உதவியதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

ஆனால், அதே சமயம் காஸாவில் உள்ள மக்களை தாக்குவதற்காக AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்று மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நாட்டிற்கு இடையேயான போரில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன
இந்நிலையில் ஏற்கனவே இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வருகிறது என்று குற்றம் சாட்டி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.