Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் திருமலை பூங்கா திறப்பு!

கனடாவில் திருமலை பூங்கா திறப்பு!

2 years ago
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்

கனடாவின் பிராம்டன் நகரில் இலங்கையின் திருகோணமலையினை மையப்படுத்தி “திருகோணமலை பூங்கா” என்ற பெயரில் பூங்கா ஒன்று நேற்றைய தினம்திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த “திருகோணமலை பூங்கா”, ட்ரிங்கோ விஷன் அனுசரணையுடனும் பிராம்டன் மாநகரின் உறுப்பினர்கள் மற்றும் மாநகர முதல்வர் பற்றிக் பிரவுன், மைக்கேல் பல்லேஷி, நவஜீத் கவுர் ஆகியோரின் அனுசரணையுடனும் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு மற்றும் பெரியவர்கள் இளைப்பாறும் இடங்கள் என அனைத்து மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பேசிய பிராண்டன் மாநகர முதல்வர்,

இலங்கையின் யாழ்ப்பாணம், திருகோணமலை பகுதியில் அதிகளவான தமிழ் மக்கள் வசிப்பது போல் எமது மாநகரத்திலும் அதிகளவான தமிழர்கள் வசிக்கின்றார்கள்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கனடாவில் முதல் முதலாக குரல் கொடுக்கின்ற மாநகர சபையாக பிராம்டன் மாநகர சபை திகழ்ந்து வருகின்றது.

இந்த பூங்காவனது ஈழத் தமிழர்களுக்கும் பிராம்டன் மாநகர மக்களுக்கும் இடையிலான நட்புக்கு அடையாளமாக அமைகின்றது.

யாழ்.பல்கலைகழகத்தில் அமைத்திருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக அமைந்திருந்த நினைவு தூபியை இலங்கை அரசாங்கம் அழித்த போது பிராம்டன் நகரத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக தூபியை அமைப்பதற்கான இடத்தை வழங்கியிருந்தனை நினைவு கூறுகிறேன்.

எமது மாநகரத்தில் இவ்வாறான ஓர் அழகிய பூங்காவினை அமைப்பதன் ஊடாக கனடிய தமிழர்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நட்புக்கு அடையாளமாக திகழ்கின்றது.

இந்த பூங்கா அமைவதற்கு பல்வேறு வழிகளிலும் உதவிய கிருஷ்ணா மற்றும் ரெஜி ஆகியோருக்கு நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மக்களுக்கும் கனடாவுக்கும் ஓர் உன்னதனாமான உறவு உள்ளது. அதனை நாம் அடிக்கடி நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் கனடாவின் பல இடங்களிலும் பல விடயங்களை செய்து வருகின்றோம்.

அதேபோல் தான் இந்த திருகோணமலை பூங்காவும் நட்புறவின் சின்னமாக அமைகிறது. என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஹாலிபாஸ் மற்றும் கியூபெக் மாகாணத்திலிருந்தும் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி
செய்திகள்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

May 15, 2025
பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!

May 15, 2025
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

May 15, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசிய பேரவை கோரிக்கை
செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசிய பேரவை கோரிக்கை

May 15, 2025
எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர
செய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

May 14, 2025
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி
செய்திகள்

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி

May 14, 2025
Next Post
மூளைச்சாவடைந்தோரின் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்; வைத்திய நிபுணர் மதிவாணன் கோரிக்கை!

மூளைச்சாவடைந்தோரின் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்; வைத்திய நிபுணர் மதிவாணன் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.