தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தடை நீடிப்பு நேற்றைய தினத்திலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தள்ளது.
ஐரோப்பிய சங்கத்தின் பொது நிலைப்பாட்டின் கீழ் நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை புதுப்பிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதுள்ள தடை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவ்வாறு தடை பட்டியலில் உள்ள தரப்பினருக்கென நிதி சேகரித்தல், சொத்துக்களை பெறுதல் , வளங்களை சேகரித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.