ஈ-விசா முறையை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை ஒகஸ்ட் 2ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈ-விசா அமைப்பு தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தரவுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குறித்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த இ-விசா முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை உலகிற்கு வெளிப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்து அதற்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கடந்த 24 ஆம் திகதி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.