மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த (09) கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை சித்தங்கேணிப் பகுதியில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்புக்கு வருகை தரும் மாணவன் ஒருவர் ‘பட்டப் பெயர்’ கூறி அழைத்ததாகத் தெரிவித்து மாணவரை ஆசிரியர் வகுப்பு வேளையில் அடித்துத் தாக்கியுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.