பிபில மெதகம பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் மெதகம பொதுச் சந்தையில் வர்த்தகரொருவரிடமிருந்து 3,000 ரூபா இலஞ்சமாகப் பெற்றபோது கைதுசெய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிபில மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கான்ஸ்டபிள் கடையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.