பாண் விலையை குறைப்பதற்கு பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு ஒருவார கால அவகாசம் வழங்கப்படும் என வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விலை குறைக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாண் விலையை 10 ரூபாவினால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதால், அந்த நிவாரணத்தை நுகர்வோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.