வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பிரத்தியோக செயலாளர் றொக்ஸ்மன் என்பவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இவர் இன்றையதினம் (01) காத்தான்குடி கடற்கரையில் வைத்து இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆற்று மணல் அகழ்வுக்கான உரிமத்தினை சிலருக்கு வழங்கும் நோக்கில் அவர்களிடமிருந்து 60 இலட்சம் ரூபாவினை இலஞ்சமாக பெற்றுக்கொள்ள சென்று, முதல் கட்டமாக 15 இலட்சம் ரூபாவினை கையூட்டல் பெற்றுக்கொள்ளும் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இவரை இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகள் பொலன்னறுவைக்கு கொண்டு சென்றுள்ளதாக உயர்மட்டங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதேசமயம் இவ்வாறு மணல் அகழ்க்கான உரிமத்தை வழங்குவதற்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தலைமையில் தான் இந்த இலஞ்சம் வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், சம்பவ இடத்திற்கு வியாழேந்திரன் நுழைய முற்படும் போது இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றதை அடுத்து இராஜாங்க அமைச்சர் தான் பயணித்த வாகனத்தை பாதையில் விட்டு விட்டு முச்சக்கர வண்டியில் தப்பி ஓடி, தற்பொழுது தலைமறைவாகியுள்ளதாகவும் சில முக நூல் பதிவுகள் தகவல் தெரிவிக்கின்றன.