நாட்டிற்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
இதேவேளை தான்தோன்றித்தனமான அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் மத்தலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதன் காரணமாக முட்டைகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசாங்கம் நிவாரணங்களை வழங்கும் பட்சத்தில் முட்டைகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.