சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை வாழைச்சேனையில் வைபவ ரீதியாக நேற்று (6) திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை வங்கித்துறையில் முன்னோடியான சம்பத் வங்கியின் நிதி நிறுவனமான சியபத பினாஸ் நிறுவனமானது இரண்டு தசாப்த கால வரலாற்றைக் கொண்டதாகும். நிகழ்வில் பிரத அதிதிகள் மலர் மாலை அணிவித்து, வெற்றிலை வழங்கி வரவேற்கப்பட்டனர்.
தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் சியபத பினான்ஸ் நிறுவனக் கிளை திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகின.
வரவேற்புரையை தொடர்ந்து நிலையான வைப்பிற்குரிய கொடுக்கல் வாங்கல் நிகழ்வு, லீசிங்குரிய கொடுக்கல் வாங்கல் நிகழ்வு, தங்கக் கடனுக்குரிய கொடுக்கல் வாங்கல் நிகழ்வு, பட்டியல் கொடுக்கல் வாங்கல் என பல்வேறு ஆரம்ப நிகழ்வுகள் வங்கியில் நடைபெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக சியபத பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் இலங்கையில் உள்ள நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தவிசாளருமான ஆனந்த செனவிரத்ன, கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி, ரோசினி விக்னேஸ்வரம், வாழைச்சேனை பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எ.ம்.ஜமீல், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்,ஆர்.பண்டார, கல்குடா நிலையப் பொறுப்பதிகாரி சந்திர குமார, கிராமசேவை உத்தியோகத்தர் க.சுபாஷ் உட்பட நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சுற்றுலாத் துறை, மீன்பிடி துறை, வியாபராம் மற்றும் விவசாயம் போன்றவற்றிக்கு பிரசித்தி பெற்ற இடமாக வாழைச்சேனை திகழ்வதனை முன்னிட்டு பிரதேச மக்களின் எதிர்கால முன்னேற்றம் கருதி இவ் நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது.
சியபத பினான்ஸ் நிறுவனமானது நாட்டின் பல பாகங்களிலும் கிளைகளைக் கொண்டு காணப்படுவதுடன் நாட்டின் பொருளாதார வளர்சிக்கு பாரிய பங்களிப்பினை செய்து வருகிறது. அந்த வகையில் வாகனத்திற்கான குத்தகை, தனிநபர் கடன் வசதி, வியாபாரக் கடன்வசதி, தங்கக் கடன் சேவை.சேமிப்பு வைப்புக்கள், மின்சாரம், நீர், விநியோகம், தொலைபேசி மற்றும் காப்புறுதி பொன்ற அனைத்து விதமான பட்டியல்களை செலுத்தும் வசதி என பல்வேறு சேவைகளை செய்வதுடன் சூழல் மாசடைவைக் குறைப்பதற்கு ஒவ்வொரு வருடமும் பல மர நடுகை திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.