மதுபான போத்தல்களுக்கு பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கரை ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து மாற்ற கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, தற்போது பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்களில் தற்போது காணப்படும் பலவீனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையின் மூலம் தவிர்க்கப்படும் என கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.