தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் போன்று போலியான இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டது தொடர்பில் விசாரணையை தொடங்கியுள்ளதாக கணினி அவசரகால பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனகல குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நேற்று (09) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த கால அவகாசம் எதிர்வரும் 7ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த போதிலும், தபால் மூலம் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.