சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரனின் நியமனப் பத்திரம் சற்று முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ்ப் பொது வேட்பாளருக்குரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சங்கு சின்னத்தில் இவர் போட்டியிடவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (15) காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
இதன்போது தமிழ் பொது வேட்பாளர் வேட்பு மனுவை சமர்ப்பித்திருந்தார்.
அத்துடன் கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.