மட்டக்களப்பு ஓட்டமாவடியில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமாரதிசாநாயக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார நடவடிக்கை நேற்றுமுன்தினம்(15) மாலை நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைத்தியர் எம்.பி.எம்.அஜிவத் தலைமையில், தேசிய மக்கள் சக்தியின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தீர்வுக்காக மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவோம் எனும் தலைப்பில் துண்டுப் பிரசுரங்கள் ஓட்டமாவடி வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அப்துல்லா மற்றும் கல்குடா செயற்குழு உறுப்பினர் எம்.பி.எம்.இர்சாத் உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.