Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வியட்நாம் செல்லும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வியட்நாம் செல்லும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள்

வியட்நாம் செல்லும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதாவது, வியட்நாம் செல்லும் பிரித்தானியர்கள், அங்கு, வணிகம் தொடர்பில் ஏதாவது தகராறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலோ, வாகன விபத்து முதலான குற்றச்செயல்கள் நிகழ்ந்தாலோ, வியட்நாம் அதிகாரிகள் கடவுச்சீட்டுக்களை பறிமுதல் செய்துவைத்துக்கொள்வார்கள் என்று பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வியட்நாமை விட்டு வெளியேற அந்நாட்டு அதிகாரிகள் தடை விதிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வியட்நாமுக்குள், உள்ளூர் அதிகாரிகள் இணையதளங்களை அணுகவும், சமூக ஊடகங்களை பயன்படுத்தவும் தடை செய்யலாம் என்றும், தொலைபேசியில் என்ன பார்த்தோம் என்பதைக்கூட அவர்கள் பார்க்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, உங்கள் பானங்களில் சட்டவிரோத போதைப்பொருட்கள் தெரியாமல் கலக்கப்படக்கூடும் என்றும், சில பிரித்தானியர்கள் அந்த வலிமையான போதைப்பொருட்களால் மன நல பாதிப்புகளுக்குக் கூட ஆளாகியுள்ளார்கள் என்றும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது.

யாரேனும் போதைப்பொருள் வைத்திருந்தால், அது மிகக் குறைந்த அளவேயானாலும், வியட்நாமில் அதற்காக உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இப்படி ஏதாவது பிரச்சினையில் பிரித்தானியர்கள் சிக்கிக்கொண்டால், வியட்நாமை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டால், ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடவேண்டும்.

மேலும், அருகிலுள்ள பிரித்தானிய தூதரகத்தையோ, துணை தூதரகத்தையோ தொடர்புகொள்ளவும் என்றும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
வாகனங்களை இறக்குமதி செய்தால் வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டும்!

வாகனங்களை இறக்குமதி செய்தால் வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு