Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பூண்டுலோயா தீப்பரவல்; பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜீவன்!

பூண்டுலோயா தீப்பரவல்; பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜீவன்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பூண்டுலோயா- சீன் லோவர் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன் தேவையான வசதிகளையும், நிதி உதவியையும் செய்துள்ளார்.

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் பழைய தோட்டம் என அழைக்கப்படும் சீன் லோவர் பூண்டுலோயா தோட்டத்தில், நேற்றைய தினம் (16) இரவு 08 மணி அளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 28 வீடுகள் கொண்ட இலக்கம் (01) தொடர் குடியிருப்பு லயத்தில் 25 வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக பகுதிக்கு பொறுப்பான கிராம அபிவிருத்தி அதிகாரியின் அறிக்கை படி பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 25 வீடுகளை சேர்ந்த 86 பேர் நிர்கதிக்குள்ளான நிலையில் அத்தோட்ட ஆலய மண்டபம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் இந்த திடீர் தீ பிடிப்பு சம்பவத்தினால் அதிர்ச்சிக்கு உள்ளான இரு வயோதிபர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் வீடுகளை இழந்து உள்ள மூன்று கர்ப்பிணி தாய்மார்கள் உறவினர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ சம்பவத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்களை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

அதேநேரம் இந்த தீ பிடித்த சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்தில் சீன் தோட்டத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இளைஞர்கள்ள போராடி உள்ள போதிலும் பலனளிக்கவில்லை எனவும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கபட்டதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த தீ பிடிப்பு சம்பவத்தை உணர்ந்த குடியிருப்பாளர்கள் முடிந்தவரை போராடி தமது உடைமைகளை காப்பாற்றியும் உள்ளனர் பலர் தமது உடைமைகளை இழந்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு நள்ளிரவில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன் உடன் தேவைகளுக்கான வசதிகளும்,நிதி உதவியும் செய்து சென்றதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
மட்டக்களப்பு கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியில் விருதாளர் விழா நிகழ்வு!

மட்டக்களப்பு கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியில் விருதாளர் விழா நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு